Skip to content

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பண்டரிநாதன் சன்னதிதெரு உள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்க ராஜ விட்டல்நாதர் கோவிலில் 103 – ஆம் உறியடி

உற்சவம் நடந்தது. பின்னர் கோவில் முன் நடந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞரர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், பண்டரிநாதர் திருவீதி உலா வாணவேடிக்கையோடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமடைந்து கோவிலுக்கு வருகை தந்தனர் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!