Skip to content

எலான் மஸ்கின் 3வது கட்சி , வேடிக்கை, அபத்தம்: டிரம்ப் கருத்து

அமெரிக்காவில் 3வது கட்சியை  எலான் மஸ்க் தொடங்கினார்.  இது குறித்து அமெரிக்க அதிபர்  டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் டிரம்ப் வெற்றிக்காக  உழைத்தவர்.  டிரம்பின் அரசில் உயர் பதவியும் வகித்தார். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக  டிரம்பிடம் இருந்து பிரிந்தார். ‘

பின்னர்   அமெரிக்கா கட்சி ( america party )என்ற புதிய கட்சியை  மஸ்க் தொடங்கினார். உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுக்க ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது’ என  எலான் மஸ்க் அறிவித்தார்.

 மஸ்கின் புதிய கட்சி குறித்து  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்காவில் இரு கட்சி முறை தான் இருந்து வருகிறது. 3வது கட்சியை தொடங்குவது குழப்பத்தை அதிகரிக்கும். மூன்றாவது கட்சியைத் தொடங்குவது அபத்தமானது.

குடியரசுக் கட்சியுடன் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வழியைத் தவறவிட்டனர்.

ஆனால் அது எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது. மூன்றாம் கட்சிகள் ஒருபோதும் வேலை செய்யவில்லை. கட்சி தொடங்குவது எலான் மஸ்கிற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்காவில் அவர்கள் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும், அவர் ஒரு மூன்றாவது அரசியல் கட்சியைத் தொடங்க விரும்புகிறார்.

நம்பிக்கையையும், மனதையும் இழந்த தீவிர இடது ஜனநாயகக் கட்சியினருடன் நமக்கு அது போதுமானது. மறுபுறம், குடியரசுக் கட்சியினர் ஒரு சீராக இயங்கும் இயந்திரம், அவர்கள் நம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மசோதாவை நிறைவேற்றினர். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

error: Content is protected !!