10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியாகி உள்ளது. இதையொட்டி கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி. செந்தில் பாலாஜி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துஉள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் VSB கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 495 மதிப்பெண்கள் பெற்று கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி ஜி.பவித்ராவுக்கும், 491 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற, அரங்கநாதன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன் எம்.பாலாஜி அவர்களுக்கும், 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்த புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி எம். அஹீனா அவர்களுக்கும் எனது அன்பையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்..