Skip to content

ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஜூனியர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 70 கிலோ எடை பிரிவில் மேடை ஏற தயாராக இருந்த சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டியைச் சார்ந்த ஹரிஹரன் (21) வாம் அப் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!