தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அது வலுவடையாது – வைகோ பேட்டி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ,
பிரதமர் மோடி நல்ல பேச்சாளர்.
அவருக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். ஆனால் அவர்
ஆங்கிலத்தில் பேசமாட்டார், ஹிந்தி மட்டுமே பேசுவார்.
மதுராந்தகத்தில் மோடி தரம் தாழ்ந்து பேசியுள்ளார். மூன்றாந்தர பேச்சாளராக பேசியுள்ளார்.
ஒன்றிய அரசு பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி வழங்குகிறது.
ஆனால் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி வழங்காமல் ஓரவஞ்சனை செய்கிறது. ஆனால் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதாக மோடி பேசி உள்ளார். அது பொய்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக மரபை பின்பற்றி தான் செயல்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அது வலுவடையாது.
திமுக 4 மாநாடுகளை முடித்து அடுத்து இரண்டு மாநாடுகள் நடைபெற உள்ளது.
திமுக வேகத்திற்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது. ரேசில் திமுகவை யாரும் வெல்ல முடியாது.
தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவந்த பின்னர்,
குழு அமைப்பு தொகுதி குறித்து கூட்டணி தலைமையிடம் பேசுவோம்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தனக்கு பத்து தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளாராரே என்ற கேள்விக்கு,
அது அவரின் விருப்பம். அவர் கேட்பதையே நானும் கேட்க வேண்டியதில்லை. நான் அரசியலில் 60 ஆண்டுகளாக உள்ளேன்.
என்.டி.ஏ – பா.ஜ.க ஆட்சி என மோடி பேசுவதும் நடக்காது அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி என எடப்பாடி பேசுவதும் நடக்காது. அவர்கள் தேர்தலில் தோல்வி அடைவார்கள்.
ஆளும் திமுக அரசு கடந்த நான்காண்டு ஆண்டுகளில் சாதனைகள் பல செய்துவிட்டது.
இப்போதும் புதிய அறிவிப்புகளை
வெளியிடுறது.
சனாதானம் தமிழகத்தில் கால் வைக்க முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை.
திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்றார்.

