Skip to content

வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக நட்சத்திர பேச்சாளரும் பத்திரிகையாளருமான செந்தில் வேல் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திருக்கடையூர் கடை வீதியில் பேசுகையில்….

அடகு வைத்த தமிழ்நாட்டின் உரிமைகளை நாங்கள் மீட்போம் என்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி பாஜக என்ற மார்வாடி கடையில் சேட்டு கடையில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகளை வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்றவர்கள் அதிமுகவும் எடப்பாடி பழனிச்சாமியும்.

நீட் வருவதற்கான காரணம் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண் சட்ட திருத்தச் மசோதா வருவதற்கான காரணம் எடப்பாடி பழனிச்சாமி, இஸ்லாமியருக்கு எதிரான சிஏஏ சட்டம் நிறைவேறுவதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக.

மோடி ஆட்சிக்கு வந்த ஐந்தே ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பணக்காரராக அதானி வந்துவிட்டார்
உலகின் பணக்கார கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வந்துவிட்டது ஆனால் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை விட பங்களாதேஷை விட இலங்கையை விட இந்தியா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாஜகவின் A டிம் B டிம் ஆக உள்ள அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்கடிக்க வேண்டும் அதனால் கைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பேசி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா முருகன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!