இந்நிலையில் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வுக்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, டி.அரிபரந்தாமன், சி.டி.செல்வம், அக்பர் அலி, பி.கலையரசன், எஸ்.விமலா, கே.கே.சசிதரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.
வாஞ்சிநாதன் புகார் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. எனவே வாஞ்சிநாதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ஓய்வு நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மதுரையில் வழக்கறிஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுவாமிநாதன் கூறியதாவது: நாங்கள் முட்டாள்கள் இல்லை. உங்களை எல்லாம் போராளி என யார் சொன்னது, காமெரி பண்றீங்க. என்றார். இதைத்தொடர்ந்து அந்த வழக்கை சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு விசாரிக்காமல், இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியின் முடிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி தான் இதில் முடீவெடுப்பார் என்றும் நீதிபதிகள் கூறினர்.