திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடையில் அருகில் வழிப்பாட்டு தளங்கள், தோல் தொழிற்சாலை, பள்ளிகள் உள்ளதால் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி ஆகும்.
இதனால் டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறி விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்பாட்டம் நடத்தியதின் பேரில் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம்பிரகாசம் தலைமையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவசௌந்தரவல்லியிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.

