Skip to content

வாரிசு பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு வீடு அலுவலகங்கள் என 8 இடத்தில் 55 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனை  நடைபெற்றுவருகிறது. சங்கர் இயக்கத்தில்  ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி ஆகியோர் இணைந்து நடித்த சங்கராந்திக்கு ஒஸ்தானு ஆகிய இரண்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் பொங்கலுக்கு வெளியிட்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தெலுங்கானா மாநில திரைப்படம் மேம்பாட்டு கழக தலைவர் தில்ராஜுவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 55 குழுக்களுடன் 8 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை  மேற்கொள்ளப்படுகின்றன. தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ் மற்றும் மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோரின் பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிலி ஹில்ஸ், கொண்டாபூர் மற்றும் கச்சிபவுலி ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

வருமான வரித்துறை சோதனையின்போது வாரிசு பட வசூல் 120 கோடி மட்டுமே விஜய்க்கு சம்பளம் 40 கோடி தந்ததாக வருமான வரி துறையினரிடம் தயாரிப்பாளர் தில் ராஜ் விளக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!