திருச்சி பிராட்டியூர் மேற்கு மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் தற்போது திடீராய்வு திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல்,பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி, பாலமுருகன், மற்றும் விஜிலென்ஸ் குழுவினர் மற்றும் ஆய்வுக்குழு அலுவலர் ராம லக்ஷ்மி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் அலுவலகத்தில் நான்கு இடங்களில் இருந்தும் மற்றும் இரண்டு புரோக்கர்களிடம் இருந்தும் ரூபாய் மொத்தம் ரூ.1,06,000/ கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பணியில் இருந்த RTO, மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது
திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது
- by Authour
