Skip to content

அமெரிக்காவில் முதல்வருக்கு வரவேற்பு……என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது… நடிகர் விஜய்சேதுபதி பதிவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.  சான்பிரான்சிஸ்கோ சென்று அங்கிருந்து  அவர் தற்போது சிகாகோ  வந்துள்ளார். சிகாகோ  நகரில் அவருக்கு தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ் மரபுப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அனைவரும் போட்டி போட்டு, குடும்பம் குடும்பமாக முதல்வருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

இந்த வரவேற்பை பார்த்த முதல்வர், உங்களை நான் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு. தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வுடன் இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

சிகாகோ நகரில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு “அமெரிக்காவில்  தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்ட   பிரமாண்ட  வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது “என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!