தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக காலையில் தகவல் வெளியானது. இதை தேமுதிக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. இதுபோன்ற வதந்திகளை நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்’
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.