கரூரில் 40 அடி உயரத்தில் விஜய்க்கு இரண்டு பெரிய பிளக்ஸ் கட்டவுட் வைத்திருந்தனர். இந்நிலையில் காற்று அதிகமாக வீசியதில் அதில் ஒரு பிளக்ஸ் பேனர் கிழிந்து சேதமடைந்தது.
தவெக தலைவர் விஜய் இன்று மதியம் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.
தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கினார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்தித்து பேசி வரும் அவர், இன்று நாமக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்களை
சந்தித்து பேசுகிறார். இன்று மதியம் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் வரை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கரூரில் இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காவல்துறை அனுமதி வழங்காமல் இருந்து வந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து, விஜய்யின் கட்சி நிர்வாகிகள் அதிரடியாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலுசாமிபுரத்தில் செய்து வருகின்றனர். சாலைகளில் இருபுறங்களிலும் விஜய் பேனர்கள் கொடி தோரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு வருகிறது.
விஜய் மக்கள் சந்திப்பு பயணம் பேசும் இடத்தில் சுமார் 40 அடி உயரத்தில் விஜய்க்கு இரண்டு பெரிய பிளக்ஸ் கட்டவுட் வைத்திருந்தனர். இந்நிலையில் காற்று அதிகமாக வீசியதில் ஒரு பிளக்ஸ் பேனர் கிழிந்து சேதமடைந்தது.