Skip to content

விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் ஹரிஹரன் (27). ஐடிஐ முடித்த இவர், போர்வெல் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்கு நேற்று ஆக. 1 ம் தேதி இரவு மேள தாளங்களுடன் இளைஞர்கள் டான்ஸ் ஆடிக் கொண்டு பங்குனி ஆறு நோக்கி சென்றனர். இந்நிலையில், போர்வெல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஹரிஹரன் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவர்களை விரைவாக செல்ல வலியுறுத்தியுள்ளார். இதனால், அவர்கள் ஹரிஹரன் மீது கோபமடைந்தனர்.

இதையடுத்து, விநாயகர் சிலையை கரைத்து விட்டு வந்த , காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த திவாகர், முகிலன் சரவணகுமார், சஞ்சய் மற்றும் சர்குணன் ஆகியோர் ஹரிஹரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரை தாக்கியது மட்டுமின்றி கல்லை எடுத்து ஹரிஹரன் நெஞ்சில் பலமாக தாக்கினர். இதில், மயங்கி விழுந்த அவரை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் அழகர் ஹரிஹரனை அடித்து கொலை செய்த திவாகர், முகிலன், சரவணகுமார், சஞ்சய், சர்குணன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!