Skip to content

உங்களுடன் ஸ்டாலின் முகாம்:மக்களிடம் அமோக வரவேற்பு- VSB பேட்டி

கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  செந்தில் பாலாஜி இன்று  கரூர் மாவட்டத்தில் நடந்து வரும்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டார். அப்போது அவர்  கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 179 முகாம்கள் நடத்த திட்டமிட்டு  2 நாளில்  8 முகாம்கள்  நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாமி்களில் 5 ஆயிரத்து 67 மனுக்கள் பெறப்பட்டது. அதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு  2246 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில்  13 துறைகளில்  43 சேவைகளும்,  ஊரகப்பகுதிகளில் 15 துறைகளில் 46 சேவைகளுக்கும்  வழங்க முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  முகாம் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.

இதுவரை  அரசைத்தேடி மக்கள் வந்து கொண்டிருந்தார்.  இப்போது மக்களைத்தேடி அவர்களதுஇல்லங்களுக்கு  அரசை அனுப்பி உள்ளார் முதல்வர்.    உங்கள் வீட்டு அருகிலேயே முகாம்களை  உருவாக்கி  பொதுமக்களிடம் மனுக்களை பெற்று  உரிய ஆவணங்களை பெற்று  அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுகிறது. சில மனுக்கள் மீது உடனுக்குடன்   நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால் அவற்றை பெற்று அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் உரிய பதில்  வழங்கப்படும்.

மக்கள் பிரச்னைகளுக்கு உடனுக்குள் தீர்வு காணப்படுவதால், அடுத்த முதல்வரும் ஸ்டாலின் தான். மீண்டும் அவர் தான் முதல்வராக வேண்டும் என மக்கள் நன்றி கூறி பாராட்டுகிறார்கள். தங்களது நன்றியை முதல்வரிடம் தெரிவிக்கும்படி மக்கள் என்னிடம் கூறினார்கள்.  முதல்வர் மீது அந்த அளவு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும்  3 லட்சம் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 4.5 லட்சம்  வாக்காளர்கள் இதுவரை சேர்க்கப்பட்டு உள்ளது.  இன்னும் அதிகமாக மக்கள் சேர இருக்கிறார்கள்.வீடு வீடாக நாங்கள் செல்லும்போது, எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என  மக்கள்  அழைக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு எப்போது வருவீர்கள் என கேட்கிறார்கள்.

வெண்ணெய்மலை கோவில் நிலம் 5 வகையில் உள்ளது. இது தொடர்பாக சென்னையில் தலைமை செயலாளர்,  அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோரிடம், இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  விரைவில் அந்த மக்களகு்கு  உரிய தீர்வு  நல்ல தீர்வு கிடைக்கும்.

வாங்கல்  பகுதியில் 2 தினங்களுக்கு முன்  யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்தது. அவருடைய மனைவி இது குறித்து புகார் அளித்து உள்ளார். அவரை சந்திக்கத்தான் நான் இப்போது போகிறேன்.   அரசு  பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு துணை நிற்கும்.  தொலைக்காட்சி, பத்திரிககைளில்  செய்தி  வெளியிடுகிறவர்கள், மணல் பிரச்னை தொடர்பாக கொலை நடந்ததாக போட்டு உள்ளார்கள். அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் சொல்வார்கள். செய்தி போடுகிறவர்கள் உண்மை தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடுவது தான்  நியாயம், தர்மமாக இருக்கும்.

இவ்வாறு அவர் அவர் கூறினார்.

 

 

 

error: Content is protected !!