கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 38 இடங்களில் ரூ.20.57 கோடியில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஒரே நாளில் 38 இடங்களில் இந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. கரூர் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை ஊராட்சி, பெரிச்சிபாளையம் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்டார் அவென்யூ பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகர், பொன் நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து மேலும் காதப்பாறை ஊராட்சிகளில், சண்முகா நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, வெண்ணமலை பட்டி பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி,
பேங்க் குடியிருப்பு பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, வேலன் நகர், கந்தன் நகர்

மற்றும் ஜெயம் நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, லட்சுமி நகர், பரணி நகர் மற்றும் ஆசை நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, ராம் நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, காதப்பாறை ஊராட்சி, அம்மன் நகர் மற்றும் தரணி நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, சோளியம்மன் நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, அரசன் நகர், அஞ்சலி நகர், அருணாச்சலா நகர் மற்றும் பி.ஜி நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணி, பசுமை நகர் பகுதியில் தார் சாலைகளை மேம்படுத்தும்

பணிகள் என மொத்தம் 38 இடங்களில் பணியினை தொடக்கி வைத்தார் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி.
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டன.இந்த நிகழ்வுகளில் நிர்வாகிகள், பொதுமக்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கரூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திறப்பு விழாக்களின் போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அந்தந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டார். கடந்த சில வாரங்களாகவே கரூர் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த திட்டங்களை விரைந்து முடிக்க முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 38 திட்டங்கள் பணிகளை தொடக்கி வைத்தார். குறிப்பாக, உள்கட்டமைப்புப் பணிகளில் அவர் காட்டும் வேகம் தொகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

