கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025 ) முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற
உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கோவை ஜெம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பழனிவேலு, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மருத்துவர் செந்தில்குமார், மருத்துவர் லோகநாதன், சமூக ஆர்வலர் அட்லஸ் நாச்சிமுத்து, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.