கரூர் வெண்ணமலை அருகே உள்ள அட்ரஸ் தனியார் திருமண மண்டபத்தில் இன்று வருவாய்த் துறையின் மூலம் கரூர் மற்றும் மண்மங்கலம் பகுதியில் உள்ள 1350 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். குறிப்பாக 1350 நபர்களுக்கும் ஒரே இடத்தில் நின்றபடி அனைவருக்கும் பட்டாக்களை அவர்
கையாலையே வழங்கினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவித்தும் தூங்குவதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டா வாங்கிய மூதாட்டி ஒருவர் செந்தில் பாலாஜி கையைப் பிடித்து நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மாநகராட்சி மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.