Skip to content

சரமாரி-கேள்விகள்..VSB-ன் வெற்றி ரகசிய பதில்

இந்நிகழ்வில், அரசு கல்வி நிறுவங்களின் தலைவர் நடேசன், JCI Karur Diamond தலைவர் நாகராஜன், அரசு கல்வி நிறுவங்களின் செயலாளர் .

கண்ணன், JCI Karur Diamond செயலாளர் மணிகண்டன், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் JCI Karur Diamond உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

கேள்விகளுக்கு பதில் அளித்து செந்தில் பாலாஜி கூறியதாவது-

கேள்வி-மாணவ செல்வங்கள் அரசியலில் எப்படி பங்களிப்பது?.

பதில்-அரசியலில் அவசியம் பெண்கள் பங்கேற்று உரிமையை நிலைநாட்ட வேண்டும். கல்வியோடு பொது அறிவையும் அரசியல் நடப்பையும் அறிந்து கொள்ள வேண்டும். 50 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. எனக்குகூட ஆலோசனைகளை வழங்கலாம்.

கேள்வி- இது வரை நீங்கள் கொண்டு வந்த திட்டங்களில் சிறந்தது எது?.

பதில்- முதலமைச்சர் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு 3000 கோடி அளவுக்கு திட்டங்களை வழங்கி உள்ளார்கள் குறிப்பாக 40 ஆண்டுகளாக குடியிருந்தவர்கள் பட்டா கிடைக்காமல் சிரமப்பட்டனர். அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஐந்து லட்சம் பட்டாக்கள் வழங்குவது என முதலமைச்சர் தீர்மானித்து கரூர் மாவட்டத்திற்கு 28000 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 45 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது‌ இன்னும் கொடுக்க இருக்கிறோம்.

கேள்வி-மின் துறையில் நீங்கள் செய்த மாற்றங்கள் என்ன?.

பதில்-மின் தடை ஏற்பட்டால் எங்கு புகார் செய்வது என சிரமப்பட்டனர். வீடு ஒரு பகுதியிலும், பணியிடம் வேறு பகுதியிலும் இருக்கும். யாரிடம் செல்வது என தெரியாத நிலையை போக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்கள். ஒரே எண் வழங்கப்பட்டு மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் மின்னகம் செயல்படுகிறது. (94987 94987). உற்பத்தி வினியோகம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 12 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன சிஇ அலுவலகம் கரூரில் ஏற்படுத்தப்பட இருக்கிறது. நாம் வகிக்கின்ற துறையில் முடிந்த அளவிற்கு திட்டங்களை கொண்டு வர வேண்டும். அதை தொடர்ந்து செய்து வருகிறேன்.

கேள்வி-மாநில அமைச்சராக உங்களது பங்களிப்பு என்ன?.

பதில்- 50% பசுமை எரிசக்தி மூலம் மின் உற்பத்தி 50% கொள்முதல் என்கிற அடிப்படையில் உற்பத்தியை அதிகரித்து விரைவில் மின்மிகை மாநிலம் ஆகும்.

கேள்வி -அரசியலில் எத்தனையோ தலைவர்கள் உள்ளனர் நீங்கள் பார்த்து ஆச்சரியப்பட்ட தலைவர் யார்?.

பதில்- நமது முதலமைச்சர் அவர்கள்தான். சென்னையில் பெருவெள்ளம் தஞ்சையில் இருந்து திருச்சி வந்து சென்னை சென்று இரவு முழுக்க பார்வையிட்டு நிவாரணம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி, இரவு ஒரு மணிக்கு அடுத்து எங்கு போகலாம் என கேட்டபோது வீட்டிற்கு என அமைச்சர் சேகர்பாபு கூற, சரி காலை 9 மணிக்கு மீண்டும் ஆய்வு செய்யலாம் எனக்கூறி சென்ற முதலமைச்சர் எட்டு மணிக்கு புறப்பட்டு விட்டார். அவரது உழைப்பை யாராலும் செய்ய முடியாது. யாருக்கும் கடுகளவு தீங்கு செய்ய மாட்டார். எல்லோருக்கும் எல்லாம் என்பதிலேயே ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. கரூரில் நான்கு தொகுதிகள் வெற்றி பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஆனால் கோவையில் பத்தில் ஒன்று கூட ஜெயிக்கவில்லை. எனினும் அனைவரும் சமம் என வாக்களிக்காத மக்களுக்கும் வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். முதல்வரின் உழைப்பை அருகில் இருந்து பார்த்து வியந்து இருக்கிறேன்.

கேள்வி-முதலமைச்சரிடம் இருந்து கற்றுக் கொண்டது என்ன?. பதில்- கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

கேள்வி- நீங்கள் தினமும் எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள்?. பதில்- எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என கேட்டால் நன்றாக இருக்கும். 4 மணி நேரம் மட்டுமே தூக்கம். பணிகள் தான் முக்கியம்.

கேள்வி- தேர்தலில் நிற்கும்போது இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததா?. பதில்-நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். கல்வி வாழ்க்கை என எல்லாவற்றிலும் சாதிக்க முடியும். 25 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறேன். எந்த களமாக இருந்தாலும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் ஆதரவு குறையாது.

கேள்வி கல்விக்கான சிறப்பு திட்டம் என்ன?. பதில் -நான் முதல்வன் முதலமைச்சரின் கனவு திட்டம் மத்திய அரசின் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற 57 பேரில் 50 பேர் இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேள்வி -நீங்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு எது?. பதில்-நிகழ்ச்சி முடிந்து வண்டியில் இருக்கின்ற உணவை சாப்பிடுவேன். இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன். இந்த உணவை சாப்பிட்டு ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

கேள்வி- உங்கள் மீது சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டு குறித்து..?.

பதில் – அந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் வந்தது சம்பந்தமும் இல்லை. ஏற்கனவே இருந்த முதலமைச்சர் மீது 18 எம்எல்ஏக்கள் நம்பிக்கை இல்லை என மனு கொடுத்தோம். உடனே என் மீது ஒரு வழக்கு பதிவு செய்கிறார்கள். என்னை முடக்குவதற்கான முயற்சி எடுக்கிறார்கள். இன்னும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2 லட்சம் கொடுத்தேன் என்று கூறும் நபர் 50 லட்சம் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில்- அதுவும் ஒரு நாளைக்கு-வாதாட முடியுமா?. பின்புலத்தில் யாரோ ஒருவர் இருக்கிறார். அவர்களை இயக்கிவிட்டு, அவர்கள் மூலமாக, அரசியல் களத்தில் மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள், குறுக்கு வழியை பயன்படுத்தி தேர்தல் களத்தில் நான் நிற்கக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்து, நீதிமன்றத்தின் மூலமாக எப்படியாவது தண்டனை பெற்றுக் கொடுத்து விடலாம் என நினைக்கிறார்கள். நிச்சயம் அவர்களது கனவு நிறைவேறாது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்டது. நிச்சயமாக அதிலிருந்து நான் வெளியே வருவேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த விதமான தவறு செய்தால் தவறை ஒத்துக் கொள்ளக் கூடியவன். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லாத வழக்கை தாக்கல் செய்து பதிவு செய்து, அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அவருடைய காவல்துறையை வைத்து செய்யப்பட்டது. நிச்சயமாக நீதிமன்றத்தில் நீதி வெல்லும்.

கேள்வி-
அரசியலில் உங்களது முதல் வெற்றி என்று எதை கூறுவீர்கள்?. பதில்-
96 முதல் முதலாக தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது எனக்கு அரசியல் தெரியாது. சுயேட்சை. அரசியல்வாதிகளுடன் பழக்கமும் கிடையாது. அதன் பிறகு தான் பயணத்தை தொடங்குகிறேன். 2006, 2011 என தொடர்ச்சியாக இதுவரை சந்தித்த தேர்தல் களங்களில் வெற்றி மட்டுமே அடைந்திருக்கிறேன். மக்களிடத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்ற நிலை வந்ததில்லை. இனியும் வராது. காரணம் நான் மக்கள் மீது வைத்திருக்கிற அன்பு பாசம் நாளுக்கு நாள் அது அதிகரித்து வருகிறது. முடிந்தவரை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இன்னும் இருக்கிறது. 83 ஆயிரம் குடும்பங்கள் கரூர் தொகுதியில் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறேன்.

கேள்வி-
உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது குடும்பத்தினர், தொகுதி மக்கள் கேட்கிறார்கள். யாருக்கு கொடுப்பீர்கள்?.
தொகுதி மக்களுக்கு தான் கொடுப்பேன் என் வாழ்நாள் முழுக்க அதுதான். என்னுடைய வாழ்நாளில் நான் என்னுடைய தொகுதி மக்களுக்கு பணியாற்றுகின்ற பொழுது இந்த உடம்பில் இருந்து உயிர் பிரிந்தால் அதை அதிகபட்ச பாக்கியமாக கருதுவேன். தொகுதி மக்களை, மாவட்ட மக்களை நேசிக்கிறேன். அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். 200 ரூபாய் கேட்டால் 100 ரூபாய் தான் இருந்தாலும், 100 ரூபாய் கடன் வாங்கி கொடுப்பேன்.

கேள்வி-
உங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத ஆசிரியர்கள் என்றால் யாரை குறிப்பிடுவீர்கள்?. பதில்- நான் பள்ளி தொடங்கி கல்லூரி வரை எனக்கு பயிற்றுவித்த எல்லா ஆசிரியர்களுடனும் நான் தொடர்பில் தான், பழகிக் கொண்டுதான் இருக்கிறேன். இன்னமும் பலர் என்னை நெறிப்படுத்தி வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் நமது வளர்ச்சியை கண்டு பொறாமைப்படாத ஒரே இனம் ஆசிரியர் இனம் மட்டுமே ஆகும். நமது பெற்றோருக்கு கடமை இருக்கிறது. ஆனால் ஆசிரியருக்கு அப்படி இல்லை. எனவே வாழ்நாள் முழுக்க அவர்களை மறக்கக் கூடாது.

கேள்வி –
செந்தில் பாலாஜி அறக்கட்டளை மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து?.
போட்டித் தேர்வுகளுக்கு செல்வார்களுக்காக இலவசமாக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். கிராமப்புற அடித்தட்டு மக்களுக்கு அரசு பணி என்ற கனவை நிறைவேற்ற செய்யும் சிறிய பணி. என்னால் முடிந்த அளவுக்கு அரசு பணியில் சேர வேண்டும் என தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!