Skip to content

கோவை வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற VSB

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை  விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி   புத்தகம் கொடுத்து வரவேற்றார்.  இதுபோல  அமைச்சர்கள்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முத்துசாமி, மாவட்ட கலெக்டர், மற்றும் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள்,  திமுக நிர்வாகிகளும் திரளாக பங்கேற்று  முதல்வரை வரவேற்றனர்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் கார் மூலம் ஈரோடு புறப்பட்டு சென்றார்.  அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

error: Content is protected !!