மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார்.ஓட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்டை ஒதுக்கியுள்ளார். அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கியுள்ளார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

