Skip to content

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது. ஆனால், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.இதனால் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த மோதலால் பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளன.

இந்நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்படுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இண்டிகோவை போன்றே ஏர் இந்தியா உள்பட பல்வேறு இந்திய விமான நிறுவனங்களும் மத்திய கிழக்கிற்கான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!