Skip to content

விஜய் செய்தா தப்பில்லையா? ரவிமோகனுக்கு ஆர்த்தி சரமாரி கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து நடைமுறைகள் தொடங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இக்கட்டான இந்தச் சூழலில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் அண்மையில் ஒரு திருமண நிகழ்வில் ஒரே நிற ஆடையில் ஜோடியாகக் கலந்துகொண்டது சர்ச்சையை மேலும் தூண்டியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களே சங்கீதா தரப்பு, த்ரிஷா தரப்பு என இரண்டாகப் பிரிந்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர். விஜய்யின் இந்த நடவடிக்கை அவரது அரசியல் பிம்பத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஜெயம் ரவி – விஜய் ஒப்பீடு: விஜய்யின் தற்போதைய நிலையை நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் கெனிஷா விவகாரத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரிய ஜெயம் ரவி, அந்த நடைமுறைகள் முடிவதற்கு முன்பே கெனிஷாவுடன் பொது நிகழ்வுகளில் நெருக்கம் காட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய்யும் அதே பாதையைப் பின்பற்றுவதாகக் கூறி, ரவி – கெனிஷா ஜோடியுடன் விஜய் – த்ரிஷா ஜோடியை ஒப்பிட்டுப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், ஒரு கட்சியின் தலைவராக விஜய் பொதுவெளியில் காட்டும் முதிர்ச்சி குறித்து விமர்சனங்கள் எழுகின்றன.

விஜய் த்ரிஷா சர்ச்சை பெரிதாக உருவெடுக்க ரவி மோகன் அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில் அவர் ” பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள். அதைக் கூட நம் நீதித்துறை புரிந்திருக்கிறது. ஒருநாள் என் மனதையும், நான் நேசிக்கும் மக்களுக்காக செய்தவற்றையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். தயவுசெய்து ஒருவரை அமைதியாக வாழ விடுங்கள்; உங்கள் தவறான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் பாதைக்குத் திரும்புகிறேன்” என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆர்த்தி ” இதுவே விவாகரத்து முடிவுக்கு வரும் முன்பு ஆர்த்தி இன்னொரு ஆணுடன் மேட்சிங்கான உடையில் சென்றிருந்தால் இந்த உலகம் ஏற்றுக்கொண்டிருக்குமா. அப்படி செய்தபின் அவள் பெண்களே பாதிக்கப்படுபவர்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது என்றால் நாங்களும் இந்த மாதிரியான செயல்களை செய்யும் ஆண்களை குற்றம்சாடதான் செய்வோம். இது பெருமைக்குரிய விஷயமில்லை இது ஒரு கொடூரனமான செயல்” என்று ஆர்த்தி கூறியுள்ளார்.

error: Content is protected !!