திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான பூர்வ பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர்வதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜயின் வாக்குறுதி கனவுகள் நிறைவேறட்டும்*
ஒவ்வொருவர்களுக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனை பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்சனை இல்லை. இன்னும் ஒருமுறை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு வாய்ப்பாக வாக்காளர் சேர்ப்பதற்கும், வாக்காளர்களை நீக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. SIR படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கிறது. மத்திய அரசு கூர்ந்து கவனித்து மெதுவாக பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் அமைக்கப்பட வேண்டும். SIR காலக்கெடு நீடிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
பீகார் வெற்றிக்கு காரணம் SIR என அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் பேச மாட்டார். பத்திரிக்கையாளர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பது எனது கருத்து. நான் அதிமுகவுடன் இணைவதற்கான அடிப்படை பூர்வாங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. செங்கோட்டையன், தினகரன் உடன் சந்திப்பு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தினம்தோறும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். தினகரன், அண்ணாமலை சந்திப்பு என்பது நல்ல சந்திப்பு தான். வாழ்த்துக்கள். அனைவரும் ஒன்றிணைய அதிகமான வாய்ப்புள்ளது. நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு” என்றார்.

