நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. காலை கடனை முடித்துவிட்டு, டாய்லெட்டில் உள்ள ஃப்ளஷ்யை அழுத்திய போது வெஸ்டர்ன் டாய்லெட் திடீரென வெடித்து சிதறியது. மீத்தேன் கேஸ்
காரணமாக டாய்லெட் வெடித்து சிதறியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மீத்தேன் வாயுவின் அளவு மிக அதிகமாக இருந்து, அது வேறு ஏதேனும் வாயுவுடன் வினைபுரிந்தால் மட்டுமே தீ ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.