கரூர் மாவட்டம் , குளித்தலை அடுத்த அய்யர்மலையில் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தாமான குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் கேமராமேன் செபாஸ்டியன் ஆகியோர் தாக்கப்பட்டதாக செய்தி வௌியாகியது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தரப்பு விளக்கம் வௌியிட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை தாக்கினாரா ஸ்ரீரங்கம் MLA திரு.பழனியாண்டி???
எம்எல்ஏவின் குவாரிக்கு நியூஸ் தமிழ் செய்தியாளர் செபஸ்டினும் கதிரவனும் சென்றதன் காரணம் என்ன??
இவரை இயக்கியவர் யார்??
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுடலை கண்ணனுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு??
சுடலை கண்ணன் செய்தியாளருடன் சென்றது ஏன்??
நடந்தது என்ன?
முதலில் எம்எல்ஏ தாக்கியதாக சொல்லப்பட்டது பெரும் பொய் அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லவே இல்லை.
சுடலை கண்ணு என்ற நபர் எம்எல்ஏ பழனியாண்டியின் குவாரியில் முறைகேடாக தாதுமனல் கொள்ளை நடைபெறுவதாக ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் உள்நோக்கம் எம்எல்ஏவிடமிருந்து பணம் பறிப்பது மட்டுமே. சுடலை கண்ணன் பல மாவட்டங்களில் இது போன்ற

கோரிகளில் முறைகேடாக தாது மணல் கொள்ளை நடைபெறுவதாக போலியாக ஒரு வழக்கு தொடர்ந்து குவாரி உரிமையாளர்களிடமிருந்து பணம் பெறுவதை விளக்கமாக கொண்டுள்ளார்.
அதே வேலையை தான் ஸ்ரீரங்கம் எம்எல் ஏ பழனியாண்டி குவாரியில் செய்து வசமாக சிக்கியுள்ளார். எம்எல்ஏவின் மகன் விமலிடம் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். அவர் தர மறுக்கவே நியூஸ் தமிழ் பத்திரிகையாளர் கதிரவனையும், செபஸ்டினையும் அழைத்துக் கொண்டு வீடியோக்கள் எடுத்து மிரட்டலாம் என்று எண்ணி எம்எல்ஏவின் குவாரிக்கு சென்று உள்ளார். அனுமதி இன்றி உள்ளே நுழைந்து ட்ரோன் மூலம் வீடியோ எடுத்ததால் அங்குள்ள பணியாளர்கள் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்களை ஒருமையிலும் ஆபாசமான வார்த்தைகளாலும் பேசியுள்ளனர். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதற்பின் தகவல் அறிந்த எம்எல்ஏவின் மகன் திரு.விமல் பத்திரிக்கையாளர் கதிரவன் செபஸ்டின் மற்றும் சுடலை கண்ணன் ஆகியோரை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய புகார் அளித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களை எந்த இடத்திலும் எம் எல் ஏ ஓ அவரது மகனோ தாக்கவில்லை, ரத்தம் சொட்ட சொட்ட அடித்ததாகவும், கடத்தி வைத்திருந்ததாகவும் போலியான தகவல்களையும் அவதூறு செய்திகளையும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் மீது பரப்புவது இவர்களின் தலையாய நோக்கம்.
குவாரியின் உரிமம் மார்ச் 31 2029 வரை உள்ளது முறைகேடாக தாது மணல் கொள்ளை நடைபெறுவதாக இருந்தால் அதை சட்டரீதியாக மாவட்ட ஆட்சியர் மூலம் வருவாய்த்துறை கனிமவளத்துறை விசாரிப்பது தான் முறை. பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் இவர்கள் நேரடியாக சென்று செய்து சேகரிப்பது என்று கூறி தனியார் இடத்தில் அத்துமீறி நுழைவது எந்த விதத்தில் நியாயம்??
நியூஸ் தமிழ் பத்திரிகையாளர் செபஸ்டின் மற்றும் கதிரவன் இருவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நிருபர்கள் இவர்கள் கரூர் மாவட்டத்திற்கு எல்லை தாண்டி சென்றது ஏன்?? பத்திரிகையாளர் என்ற போர்வையில் பத்திரிக்கையை அறம் மீறி செயல்படுவர் இவர்கள் இருவர் இந்த துறையில் இருந்து அகற்றப்பட வேண்டிய நபர்கள் . இவ்வாறு பழனியாண்டி எம்எல்ஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

