2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
கன்னி :
கன்னி ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகிறது. 7 ஆம் இடத்தில் சனி இருக்கும்போது அவ்வளவு நல்ல பலன்கள் கிடைக்காது. சமூகத் தொடர்பு நன்றாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். திருமண யோகம் ஏற்படும். கோர்ட், கேஸ் தொடர்பான பிரச்சனைகள் சமரசமாகும். பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். பாகப் பிரிவினை முடியும். நீங்கள் எதிர்பார்த்த பாகப்பிரிவினை உண்டாகும்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். பிஆர் அமைப்பு உண்டாகும். சுபவிரயம் ஏற்படும். குடும்பத்தில் திருமணம், பிள்ளைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் செய்வது போன்ற சுபவிரயங்கள் ஏற்படும். இந்த ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு வேலையோடும், பிஸியாகவும் இருப்பது நல்லது. காதல் கைகூடும், காதல் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது.
திருமணம்
உங்களை விட பெரியவர்களை திருமணம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதுவரை சேமிக்கத் தொடங்காதவர்கள் கூட இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். குறிக்கோளை நோக்கிய பயணிக்கத் தொடங்குவீர்கள். அந்தப் பயணம் வெற்றி அடையும். நண்பர்களிடம் கொடுத்த பணங்கள் மீண்டும் உங்களுக்கு வந்து சேரும். தொழிலில் வேலை ஆட்கள் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும். உஷாராக இருப்பது நல்லது.
பண மோசடி
துரோகம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பண மோசடிகளில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளதால் பணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. பழைய வாகனத்துக்கு பெரிய அளவில் செலவுகள் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
கவனம்
வீட்டை புனரைமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வீடுகளில் முக்கியமான எலக்ட்ரிக்கல், சம்ப் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்டதூரப் பயணங்கள், ஆன்மீகப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. அப்படியே மீறி சென்று வந்தாலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். கடன் முடிந்த அளவுக்கு வாங்காமல் இருப்பது நல்லது.
ஏற்கனவே இருந்த பார்ட்னர்ஷிப் தொழில் முறிவதற்கான வாய்ப்புள்ளது. புதிதாக தொழில் தொடங்கினால் நஷ்டத்தில் முடிவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதனால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விட்டு செயல்படுவது நன்மையைத் தரும்.

