Skip to content

யார் தீய சக்தி-நல்ல சக்தி என 2026ல் தெரியும்-விஜய் வசந்த்

யார் தீய சக்தி – நல்ல சக்தி என 2026 தேர்தலில் தெரியவரும். ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டனின் கோரிக்கையாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேட்டி.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறுகையில், 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மாநில அரசு 40% – மத்திய அரசு 60% நிதி பங்கீடு என கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர. எனவே இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டுமென தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருகிறோம்.

பாஜக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது. மக்களுக்கு இல்லாமல் – கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியாக மாறி வருகிறது. அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருகிறது.

வேலைவாய்ப்பு இல்லை, வறுமை தீரவில்லை இதை சரி செய்ய எந்த நடவடிக்கும் மத்திய அரசு எடுக்கவில்லை.

தவெக குறித்த கேட்டதற்கு,

இப்போது தான் புதிய கட்சி தொடங்கி போய் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் நெருங்கி வருவதால், காலம் பதில் சொல்லும்.

ஆட்சியில் பங்கு தொடர்பாக கேட்டதற்கு,
ஒவ்வொரு தொண்டனின் கருத்தாக உள்ளது. மேலிட பொறுப்பாளர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கூடிய விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. அதில் எல்லாம் முடிவாகும். அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என்றார்.

எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. கூடிய விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

எப்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பீகாரில் கடைசி நேரத்தில் பல லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே இதை துல்லியமாக பார்க்க வேண்டும்.

யார் தீய சக்தி தூய சக்தி என்று வருகின்ற 2026 தேர்தலில் தெரியவரும். புதிதாக வரும் கட்சி, ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும். இந்த ஆட்சி நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். எங்கள் கூட்டணி வெல்லும்.

நான் எம்பியாக இருக்கும்போது ஏன் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்கும் போது கன்னியாகுமரி தொகுதி கிடைத்தால் சந்தோசம் என்றார்.

error: Content is protected !!