சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வளர்ந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை.
வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற உடன்பிறப்புகளுக்கு இடையில் கடும் போட்டி இருந்தாலும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மருத்துவர் முத்துகருப்பன் முன்னிலையில் உள்ளார். தொகுதி மக்கள்

தொகுதி திமுக நிர்வாகிகள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்துள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த மருத்துவர் மு.க.முத்துக்கருப்பன் சீட் கேட்கிறார். புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீரையா, முன்னாள் மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோரது குடும்ப வகையறாவை சேர்ந்த பாரம்பர்ய குடும்ப பின்னணி உடையவர் என்பதால், தொகுதி முழுக்க பரவலாக அறியப்படுகிறார்.
கொரோனா காலங்களில் சொந்த பணத்தில் மக்களுக்கு சேவையாற்றியது, கட்சியினருக்கு உதவுவது, கோடைக் காலங்களில் தன்னுடைய சொந்த பணத்தில் மாவட்ட திமுக அலுவலகம், மருத்துவ கல்லூரி மருத்துவமனை எதிரே நீர்மோர் பந்தல் அமைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டும் செயல்களை செய்வது என்று தொகுதி மக்கள் மத்தியில் நன்கு பரிட்சயம் ஆனவர் என்பதால், இவர் சிட் கிடைக்கும் இடத்தில் முன்னிலையில் உள்ளார் சீட் கிடைக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் தொகுதி வாசிகள். ஐபேக் டீம், உளவுத்துறை ரிப்போர்ட்டிலும் இவரது பெயர் இருப்பதாக சொல்கிறார்கள். மருத்துவ அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார்.
இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த மருத்துவர் வை.முத்துராஜா இருக்கிறார். இந்தமுறையும் சீட் கேட்டு விருப்ப மனு செய்துள்ளார்.
அதேபோல், தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், ‘இந்தமுறை எப்படியும் சீட் வாங்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். , ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த எம்.எம்.அப்துல்லாவும் சீட் கேட்டு வருகிறார்.

