ஊரக வளர்ச்சி துறை சார்பில் 97.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 பணிகள் திறப்பு விழா இன்று திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திருச்செந்துரை பகுதியில் நடந்தது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து

அமைச்சர் கே.என் நேரு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது…
SIR படிவம் நிரப்பும் பணிக்கு திமுகவினர் அனுமதி பெற்று தான் செல்கின்றனர் . BLO என்பது அரசு அலுவலர் BLA2 என்பவர் அரசாங்கத்தால் தேர்தல் ஆணையத்தால் கையெழுத்து போட்டு அதிகாரம்

கொடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு 50 ஓட்டு சேர்க்கலாம் என அதிகாரம் கொடுத்துள்ளனர். திமுக மட்டும் இல்லை யார் வேண்டுமானாலும் அனுமதி பெற்றுக்கொண்டு SIR படிவம் நிரப்பும் அதிகாரி உடன் செல்லலாம். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என திமுகவினர் கூறவில்லை. அதிமுகவினரும் வருகிறேன் என்று கூறினார்கள் வாருங்கள் என்று தான் கூறினோம்.
எவ்வளவு மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் அரசு அதிகாரிகள் தயாராக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.
காவிரி புதிய பாலம் கட்டுமான பணி அடுத்த மாதத்தில் முடிவடைந்து விடும். அதிமுக பாஜக சேர்ந்து இருந்திருந்தால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை வெற்றி பெற்று இருப்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு… அதிமுக – பாஜக சேர்ந்து அவர்கள் வாக்கை கூட்டிப் பாருங்கள் 25 தொகுதிகள் எப்படி வர முடியும் அது மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

