Skip to content

புதுகை அருகே கணவனை கொன்று நாடகமாடிய மனைவி -மகள்கள் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு(55). இவரது மனைவி மகாலெட்சுமி(43). இவர்களுக்கு தமிழ் செல்வி(25), சாரதா(20) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 52 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கும் அவரது கணவர் பழனிவேலுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அப்போது பழனிவேலு மகாலட்சுமியை கண்டித்த போது ஆத்திரமடைந்த மகாலட்சுமி பழனிவேலுவை அடித்து கொலை செய்துவிட்டு அவரது வீட்டின் அருகே உள்ள கழிவறை அருகே குழிதோண்டி புதைத்து வைத்துள்ளார். இதற்கு அவரது இரண்டு மகள்களும் ஆதரவாக இருந்துள்ளனர்.

பின்னர் பழனிவேலுக்கு கொழுப்பு கட்டிகள் உள்ள நிலையில் அதற்காக கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக அனைவரையும் நம்ப வைத்து வந்த நிலையில் நீண்ட நாட்களாக பழனிவேலு அவரது சகோதரியான காவேரியை தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து தனது சகோதரரை காணவில்லை என்று கூறி நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாலட்சுமி தான் அவரது கணவர் பழனிவேலுவை அடித்து கொலை செய்து புதைத்துவிட்டு நாடகம் ஆடியதும் அதற்கு அவரது இரண்டு மகள்களும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்ததை தொடர்ந்து தற்பொழுது மகாலட்சுமியையும் அவரது மகள்களான தமிழ்ச்செல்வி மற்றும் சாரதா ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் பழனிவேலுவை புதைத்த இடத்திற்கு மகாலட்சுமியை அழைத்துச் சென்று திருமயம் வட்டாட்சியர்வரதராஜன் முன்னிலையில் நமணசமுத்திரம் போலீசார் உடலைத் தோண்டி எடுத்து அங்கேயே மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு ஆய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!