Skip to content

கணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பகத் (45) இவரது மனைவி மங்கிரிதா பகத். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணமானது முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மங்கிரிதா குடும்பத்தை விட்டு பிரிந்து மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். ஆனாலும் அவ்வப்போது கணவன் வீட்டுக்கு வந்து மகள்களை பார்த்துவிட்டு செல்வார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மங்கிரிதா, மகள்களை பார்க்க கணவன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மங்கிரிதாவை அவரது கணவன் சந்தோஷ் பகத், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மங்கிரிதா அருகில் கிடந்த இரும்பு சுத்தியலால் சந்தோஷ் பகத்தை முகம் மற்றும் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த சந்தோஷ் மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனால் பதட்டமடைந்த மங்கிரிதா, ஆத்திரத்தில் கணவனை கொலை செய்து விட்டோமே என மனவேதனை அடைந்தார். இதனால் பதறிபோன அவர் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தோஷ் பகத்தின் உடலை ஒரு போர்வையில் சுற்றி சூட்கேசில் அடைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு சென்றார். அங்கிருந்து அவர் தனது 2-வது மகளிடம் நடந்தது குறித்து செல்போனில் கூறி கதறி அழுதார். மேலும் என்னை மன்னித்து விடு என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தனது மாமா வினோத் மன்ஜிக்கு தகவல் தெரிவித்தார். வினோத் பாஜி உடனே போலீசாருக்கு தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வீட்டில் சூட்கேசில் அடைத்து வைத்திருந்த சந்தோஷ் பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சகோதரர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மங்கிரிதாவை பிடிக மும்பை விரைந்துள்ளனர்.

error: Content is protected !!