புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண் போலீஸ் ஏட்டு அபர்ணா வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை வேலூரில் வைத்து புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தான் பெண் ஏட்டு வீட்டில் திருடிச்சென்ற போது
சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவரை புதுக்கோட்டை க்கு அழைத்து வந்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

