புதுக்கோட்டை மாவட்டம் வடக்குப்பட்டி கீரனூர் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் மாரிமுத்து (50). இவர் நேற்றுமுன்தினம் தனது பைக்கில் மனைவி முத்துலட்சுமியுடன் தஞ்சை மாவட்டம் பூதலூருக்கு வந்தார். பின்னர் அன்று மாலை பூதலூரிலிருந்து பைக்கில் ஊருக்கு இருவரும் புறப்பட்டனர்.
தஞ்சை அருகே சானூரப்பட்டி கடைவீதியில் சென்ற போது மாரிமுத்து பைக் மீது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் மாரிமுத்து , முத்துலட்சுமி இருவரும் தூக்கி வீசப்பட்டனர் . அப்போது முத்துலட்சுமி மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்துலட்சுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்துவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் லாரி டிரைவர் ரகுபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.