சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்த 129 மகளிர்க்கு தையல் இயந்திரமும் கணினி பயிற்சி பெற்ற 135 மாணவர்களுக்கு மடிக்கணினியும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “பயனாளிகளாக பெண்கள் தான் இங்கு பாதிக்கு மேற்பட்டோர் வந்துள்ளனர்.100 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் வெளியே வர முடியாது.60 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்க முடியாது.இதற்கு எல்லாம் போராடி மகளிருக்கான சுதந்திரத்தை பெற்று தந்தது தான் திராவிட இயக்கம்.பெரியாரும் அண்ணாவும் நினைத்ததை நனவாக்கியவர் கலைஞர். கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர்க்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு இலவச பயணம்தான்.இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கிறார்கள். அதேபோல் காலை உணவு திட்டமும் முதலமைச்சர் கொண்டுவந்து செயலல்படுத்தி வருகிறார்.
இன்னும் இரண்டு மாதங்களில் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.அரசின் திட்டங்களை மக்களிடம் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.துறைமுகம் தொகுதி வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் முன்னரே உங்களுக்கு தெரியும், கடந்த முறையைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், உங்கள் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு உங்களுக்கான கல்வி உரிமையை பெற்று கொடுத்துள்ளார்.இந்த தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் யார் என்று உங்களுக்கு தெரியும், தலைவர் அறிவிப்பதற்கு முன்பே அந்த ரகசியம் உங்களுக்கு தெரியும், கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு உங்களுடையது,உங்களின் பொருளாதார சுதந்திரத்தை அவர் வாங்கி கொடுத்திருக்கிறார், உங்களுக்கு கல்வி தந்திருக்கிறார், உங்களுடைய தேவையை பார்த்து பார்த்து செய்து இருக்கிறார்” என்றார்.