திருச்சி காந்தி மார்கெட் காந்தி சிலை அருகே தோளில் சுமை ஏற்றி சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது, அவ்வழியாக வந்த பொக்லைன் லாரி இன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உடலை கைப்பற்றி காந்தி மார்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

