Skip to content

போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

உலக புகைப்பட தினம்(ஆகஸ்ட் 19) இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்வர்  மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது, “தினமும் நீங்கள் என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள். இன்று ஒரு நாள் நான் உங்களை படம் எடுக்கிறேன்” என்று உற்சாகமாக கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கலைஞர் ஒருவரிடம் இருந்த கேமராவை வாங்கி, அனைத்து புகைப்பட கலைஞர்களையும் ஒன்றாக அமரச் செய்து புகைப்படம் எடுத்து அசத்தினார்.

error: Content is protected !!