தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், பின்னர் சமூக வலைதளங்களில் பேட்டியும் கொடுத்திருந்தார்.
இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்’ என்று ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். இதனை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்தார். ‘நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஒருபோதும் டி.என்.ஏ. பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன்’, என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (இன்ஸ்டா ஸ்டோரி) வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ‘ஹலோ கணவரே… டி.என்.ஏ. பரிசோதனைக்கு நீங்கள் அறிக்கை கொடுத்துள்ளீர்கள். ஆனால் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடி சிலருக்கு பணம் கொடுத்து யூ-டியூப்களில் எனக்கெதிரான தகவல்கள் வெளியிட செய்கிறீர்கள். நான் அமைதியாக இருந்தாலும், உங்களது உள்குத்து என்னவென்று தெரியாமல் போய்விடுமா என்ன? தைரியம் இருந்தால் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வாங்க கணவரே… சும்மா அறிக்கை மட்டும் கொடுப்பது போதாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

