Skip to content

இளம்பெண் மாயம்.. டூவீலர் திருட்டு..வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்

ஸ்ரீரங்கம், மேலூர் செட்டியார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சிவபாக்கியம் (34 )வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு வேலைக்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியரின் டூவீலர் திருட்டு

தேனி மாவட்டம் பெரியகுளம் வரதராஜ் நகரை சேர்ந்தவர் ரூபன் ( 24 )இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் இருசக்கர வாகன டயர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார் மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது .இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் ( 37 ) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார் இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. கடந்த சில நாட்களாக ராஜ்குமார் மன உளைச்சலில் இருந்து வந்தார் இந்த நிலையில் ராஜ்குமார் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார் இது குறித்து எடமலை பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலி தொழிலாளி தற்கொலை

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் ( 43 ) கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி சியாமளா (45). முருகானந்தம் கடந்த பத்தாண்டுகளாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இந்த நிலையில் நேற்று முருகானந்தம் தன் மனைவியை தொடர்பு கொண்டு தான் விஷம் உட்கொண்டதாக தெரிவித்தார் இதைத்தொடர்ந்து சரஸ்வதி அங்கு சென்று பார்த்தபோது முருகானந்தம் மயங்கி நிலையில் கிடந்தார் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவால் சிறைக்கைதி சாவு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குட்செட் சாலை ஆறுமுகம் காலனியைச் சேர்ந்தவர் பழனிவேல் ( 71) இவர் அப்பகுதியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அவர் எப்படி இருந்தார் என்பது குறித்து திருச்சி நான்காவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா, புகையிலை விற்ற மூன்று பேர் கைது


திருச்சி உறையூர் வடிவேல் நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்ற உறையூர் செல்வ மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன் 26 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருட்கள்
விற்ற இரண்டு பேர் கைது

திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதியில் சோதனை நடத்தினர் அப்போது திருச்சி கலெக்டர் அலுவலக சாலை அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற மிளகு பாறை புதுத் தெருவை சேர்ந்த மருதமுத்து (55 )என்பவரை செசன்ஸ்கோர்ட் போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல தில்லை நகர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற தில்லை நகர் தூக்கு மேடை தெருவை சேர்ந்த கணேசன் (40 )என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த மாநகரப் போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர்

error: Content is protected !!