தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆணைக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (31). இவர் நேற்று மாலை கும்பகோணம் அருகே மதுாளம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டு இருந்தது. அங்கு, தஞ்சாவூர் ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த குமரன் (45) என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்துள்ளார், அவரிடம் கேட்டை திறக்க கூறி, போதையில் ஞானசேகர் தகராறு செய்துள்ளார். மேலும், குமரனை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியுள்ளார்.
இது குறித்து, கேட் கீப்பர் குமரன், கும்பகோணம் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேலனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஞானசேகரை போலீசார் கைது செய்தனர். பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.