டூவீலரை வழிமறித்து வாலிபரிடம் கொள்ளை… மர்ம நபர் தப்பி ஓட்டம்
திருச்சி மண்ணச்சநல்லூர் கொணலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30). இவர் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உட்பட்ட பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு நின்றிருந்த மர்ம நபர் இவரிடம் உதவி கேட்பது போல் நிறுத்தி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிறுமியை சீரழித்த வாலிபர் கைது
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் ( 24 ) இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர் .இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரசாந்த் அந்த சிறுமியை தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்திற்கு அழைத்து, அவரது அனுமதி இன்றி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனால் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருந்தது மருத்துவர்களுக்கு தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து பிரசாந்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.
விமான பயணி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் எலங்குடியைச் சேர்ந்தவர் சசிகுமார் (43). இவர் நேற்று மலேசியாவில் இருந்து விமான மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கியும் சசிகுமார் மட்டும் கீழே இறங்காமல் இருந்தார் உடனே விமான மேலாளர்கள் அவரை சென்று பார்த்த போதுஅவர் மயங்கிய நிலையில் இருந்தார் பின்னர் சசிகுமார் விமானத்தில் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கல்லூரி மாணவி தூக்கிட்டு சாவு..
திருச்சி திருவரங்கம் வீரேஸ்வரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (50) இவரது மகள் இந்து மாலினி (19 )இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வந்தார் . மேலும் இந்து மாலினி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இந்துமாலினி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீசாரை தாக்கிய வாலிபர் கைது
திருச்சி எடமலை பட்டிபுதூர் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக சாலை விதிகளை மீறி அதிவேகமாக ஒரு பைக் போலீசாரை கடந்து சென்றது இதை தொடர்ந்து போலீசார் அந்த பைக்கை பின்தொடர்ந்து சென்று பைக் ஓட்டியவர்களை பிடித்தனர். அப்போது அந்த பைக்கில் இருந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி டாக்கி அவர்களது கடமையை செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து எடமலைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி ஐந்தாவது தெருவை சேர்ந்த அசீர் முகமது (25 )என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடம் இருந்து பைக் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கத்தி முனையில் பணம் பறித்தவாலிபர் கைது
திருச்சி திருவரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாரதி (20) இவர் திருவானைக்கோவில் தெப்பக்குளம் அருகே நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார் .இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து திருவானைக்கோவில் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.