திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இதையடுத்து மற்றொரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திர நகரை சேர்ந்த ஆல்பர்ட் ( 30) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் ஆல்பர்ட் டை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர்.மேலும் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

