Skip to content

திருச்சியில் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (26 )என்பவரது தங்கைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் திருமணமான ரெண்டு மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அபிஷேக் தனது மனைவியை பிரிந்ததாக தெரிகிறது. இதனால் விக்கிக்கும் அபிஷேகுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த விக்கி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மைத்துனர் அபிஷேக்கை அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றி அபிஷேக்கின் தந்தை சொக்கலிங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தீயபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விக்கியை கைது செய்தனர்.

error: Content is protected !!