Skip to content

கல்லணைகால்வாயில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர்-தேடும் பணி தீவிரம்

  • by Authour

தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி, வனதுர்கா நகர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரின் மகன் முகமது அசீம் (28). இவர் தனது 2 நண்பர்களுடன் நேற்று மாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் கல்லணைக்கால்வாய் ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது முகமது அசீம் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் முகமது அசீம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதை பார்த்து அவரது 2 நண்பர்கள் முகமது அசீமை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடன் மருத்துவக்கல்லூரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் இறங்கி முகமது அசீமை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை தீயணைப்பு படை வீரர்கள் மீண்டும் கல்லணைக்கால்வாய் ஆற்றில் பல கிலோ மீட்டர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!