Skip to content

வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

கரூரில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் முக்கியசாலையில் பைக் ஸ்டண்ட் செய்தபடி சென்ற நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கரூர்-திருச்சி சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து கரூர் செல்லும் (திருமாநிலையூர் வரை.
ஒரு நபர், இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக, வாகனத்தின் மீது படுத்துக்கொண்டும், கால்களை பின்புறமாக வைத்துக்கொண்டும் ஏதோ சாகசம் செய்வதுபோல் இரு சக்கர வாகனத்தை இயக்கியுள்ளார்.

அந்தச் சாலையில் அருகில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கரூர்-திருச்சி சாலையில் நாள் ஒன்றுக்கு 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில், இத்தகைய அபாயகரமான செயல் நடந்துள்ளது.

வாகனம் ஓட்டிய நபர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த போது பின்னால் வந்த நபர் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயலில் ஈடுபட்டவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!