Skip to content

வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான்

 

வேலை வாங்கி தருவதாக…..மணப்பாறை MLA பெயரில் வசூல்வேட்டை நடத்தும் ரகுமான்

======

தீபாவளி சீட்டு மோசடி,   ஏலச்சீட்டு மோசடி,  வேலை வாங்கி தருவதாக மோசடி என தினமும் பத்து மோசடிகளை  கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் மோசடியும் ஓயவில்லை, ஏமாந்து போகும் மக்களும்  திருந்தியதாக தெரியவில்லை. நாள்தோறும்  மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வரிசையில் இப்போது புதிதாக கிளம்பி இருக்கிறது  திருச்சி மாவட்டம் வளநாடு கைகாட்டி அப்துல் ரகுமானின் வசூல் வேட்டை மோசடி.  இவர் அரசு வேலை வாங்கித்தருவதாக   லட்ச கணக்கில் பணம் வசூல் செய்கிறார்.  இதற்காக இவர் மணப்பாறை  தொகுதி மமக எம்.எல்.ஏ. அப்துல் சமது பெயரை பயன்படுத்தி  வசூல்  வேட்டையில் ஈடுபடுகிறார்.

அப்துல் ரகுமான் அப்படி என்ன வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார் என்பதை பார்க்கலாம் ….. வாங்க….

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி ஒன்றியம் வளநாடு கைகாட்டியில் காலணி வியாபாரம் செய்து வருபவர் முஸ்தபா  என்பவரது  மகன் அப்துல் ரகுமான். இவர் மணப்பாறை எம் எல் ஏ  அப்துல் சமது பெயரை சொல்லி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள்  கூறுகிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்,  சமீபத்தில் கூட  அப்துல் ரகுமான்    அரசு வேலை  வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை  கூறி பணம் பறிக்கும்  சம்பவங்கள்  பல நடந்துள்ளதாக மணப்பாறை பகுதி மக்கள் கதை கதையாக கூறுகிறார்கள்.

பிராம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மணிவேல் என்பவருடைய மனைவி. வெண்ணிலா வுக்கு,  ரேஷன் கடையில்  உதவியாளர்  வேலை வாங்கித் தருவதாக பிராம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் பேசுகிறார்  அப்துல் ரகுமான்.  மணப்பாறை எம்எல்ஏ  அப்துல் சமது தான்  இதற்காக பணம்  வாங்க சொன்னார் எனக் கூறி,  கேட்கிறார்.

இப்படி பேரம் பேசி 3 லட்ச ரூபாய் வீதம் இரண்டு முறை ஆறு லட்ச ரூபாய் பணம் பெறும் வீடியோ  சமீபத்தில் வெளியாகி பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் எம்.எல்.ஏ.  அப்துல்சமது விடமும் ,  அவரது  உதவியாளர்  காதரிடமும் பேசி விட்டேன்.  98 சதவீதம் வேலை உறுதியாகி விடும் என்று சொல்லிவிட்டார்கள் என்று அப்துல் ரகுமான் பேகிறார்.

ரேஷன் கடை உதவியாளர்  வேலைக்கு ரூ. 9 லட்சம்  பேசி, ரூ.6 லட்சம்  கையூட்டு பெறும் இந்த செயல் எம்.எல்.ஏ. அப்துல் சமதுவுக்கு  தெரியுமா என்பது  தெரியவில்லை.  இந்த வீடியோ  வெளியாகி மணப்பாறை பகுதியில் பரபரப்பாக  பேசப்பட்டும்  இது குறித்து  எம்.எல்.ஏ. அப்துல் சமதுவிடம் இருந்து எந்த மறுப்பும் வந்ததாக தெரியவில்லை.  வெண்ணிலாவுக்கு வேலை கிடைத்ததாகவும் தெரியவில்லை.,  ஆனால் அப்துல்  ரகுமான் ரூ.6 லட்சம் வாங்கி விட்டார்.அப்துல் ரகுமான் கைவரிசை இன்னும் எங்கெங்கெல்லாம்  நீண்டு இருக்கிறதோ , அந்த பட்டியல் நீள்வதற்குள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்கிறார்கள் மணப்பாறை மக்கள்.  இதற்கான  விளக்கத்தை எம்.எல்.ஏவிடம் எதிர்பார்க்கிறார்கள் மணப்பாறை தொகுதி மக்கள்.

 

 

error: Content is protected !!