சிட்னியின் போனிரிக் பகுதியில் உள்ள வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். யூத மதப் பண்டிகையான ஹனுக்காவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி, 29 பேர் காயமடைந்தனர். இதில், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நவ்நீத் அக்ரம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான எஃபிஐயும் இந்த விவகாரத்தில் உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

