சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன்,மற்றும் எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளி யுவா கிளப் மாணவர்கள் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு 1.5 மணி நேரத்தில் 15 அடி உயர கிறிஸ்மஸ் மர வடிவில் உருவாக்கி வெற்றிகரமாக உலக சாதனை படைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் உருவாக்கிய கிறிஸ்துமஸ் மரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.இந்த முயற்சி எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளியில் நடைபெற்றது புளோரிடாவின் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் இந்த முயற்சியை மதிப்பீடு செய்தார். அதைத் தொடர்ந்து, பள்ளி யுவா கிளப் மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்தில் கிறிஸ்மஸ் மரம் என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது.கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முந்தய நாட்களில் இம்மரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறித்தவர்களின் வீடுகளில் வைத்திருப்பார்கள்.
இவ்விழாவில் எஸ்.எஸ்.வி.எம் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் நிறுவனர் சி.சிவநேசன், சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் இணை நிறுவனர் சசிகலா சத்தியமூர்த்தி மற்றும் சிர்ஸ்டோபர் டெய்லர் கிராப்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இந்த முயற்சி குறித்து பேசிய சசிகலா சத்தியமூர்த்தி, ஒவ்வொரு மாதமும் சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை ஒரு சமூகப் பணியை செய்கிறது என்றும், இந்த முயற்சி மாணவர்களிடையே புத்தகங்களை படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.இந்த கிறிஸ்மஸ் மரம் போன்ற கட்டமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட 12 ஆயிரம் புத்தகங்களை சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளையின் நூலகத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.இந்த திட்டத்தின் கீழ்,கோவையில் உள்ள பல மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் நூலகங்களை அமைக்க அறக்கட்டளை திட்டமிட்டு, அடுத்த கல்வியாண்டில் தொடங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.