கோவை, பொள்ளாச்சியில் 13 வயது சிறுமி வயிற்று வலியின் காரணமாக சிறுமியின் அம்மா பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது கர்பமாக இருப்பதாக தெரிந்தபின் குழந்தைகள் நல உதவி எண்ணான 1098 க்கு புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரனையில் சிறுமியிடம் விசாரணை செய்ததில் தான் தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தவர் எனவும் தற்போது பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார் தனது வீட்டின் அருகில் வசித்து வந்த காமு (எ) காமாட்சி (27) திண்டுக்கல் என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள காலி இடத்திற்கும் அவ்வப்போது இரவு நேரங்களில் அழைத்து சென்று பலமுறை பாலியல் வல்லுறவு வைத்துக் கொண்டதாகவும் மேலும் சிறுமியின் காதலன் 15வயது சிறுவன் சிறுமியை அவ்வப்போது தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்ததின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் நேற்று அழைத்து விசாரணை செய்ததில் இருவதும் சிறுமியுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதன் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ வழக்கில் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பொள்ளாச்சியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன் கைது
- by Authour
