Skip to content

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பாஜக நிர்வாகி போக்சோவில் கைது..

பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி மாணவியின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், போக்சோ வழக்கில் பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கைது செய்யப்பட்டுள்ளார். மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்படி கைது செய்யப்பட்டார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு தொடர்பாக பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷாவிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா, மாணவியின் தாய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!